Friday, May 14, 2010

யூத்து

நம்ம மேலாளர் ஒருத்தரு ரொம்ப யூத்து. மனசுக்குள்ள இன்னும் மன்மத குஞ்சுன்னு நெனப்பு. புள்ள குட்டி போட்டு கூட இன்னும் குட்டி போட்ட பூன மாதிரி குட்டிங்க பின்னாடியே அலைஞ்சுகிட்டு இருக்காரு. காலைல எழுந்த உடனேயே மொத வேலையே சும்மா ஏரியா எல்லாத்துக்கும் யூரியா அடிக்கிற மாதிரி டை அடிக்கிறது தான். அப்புறம் நாலு தடவ குளிச்சுட்டு ரெண்டு டப்பா நாத்தா மருந்த அடுச்சுகிட்டு , காலுக்கு ரீபோக் சூ, கண்ணுக்கு ரய்பான் சன் கிளாஸ், முதுகுல ஒரு பாக் அப்புறம் கையுல ஒரு ப்ளாக்பெர்ரி போனு(பையில வெச்சா அவரு அந்த போனு வெச்சுருக்கது யாருக்கும் தெரியாதுல) எல்லாம் எடுத்துகிட்டு ஒரு 1995 மாடல் ஸ்கூட்டில ஆபீஸ்கு ஸ்டைலா(படையப்பா) வருவாரு. அந்த பாக்ல பவுடர், நாத்த மருந்து, வாட்டர் பாட்டில் அப்புறம் ஒரு கோட்டர் பாட்டில் இதெல்லாம் இருக்கும். உள்ள வரும்போதே ஒரு பொண்ணு கூட விடாம எல்லாருக்கும் ஹாய் சொல்லிட்டே வருவாரு. அன்னிக்கு எந்தெந்த புள்ள வரலன்னு சீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே தலைவரு சர்வே எடுத்துருவாரு. வந்ததும் பொண்ணுங்களுக்கு மட்டும் குட்மார்னிங் மெயில் போகும். தலைவரே இப்டி கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆகியும் நீங்க அடங்க மாட்டீங்களான்னு கேட்டா இல்ல தம்பி நீங்க எல்லாரும் கல்யாணம் ஆகாத bachelor பொறுக்கி பசங்க, நானு கல்யாணம் ஆகி பொறுப்பா இருக்குற குடும்பஸ்தன். அதுனால இங்கிட்டு நான் தான் ராசா, அங்கிட்டு இருக்குற எல்லா பொண்ணுங்களும் என்னோட ரோசா, நீ எடத்த காலி பண்ணு லேசா அப்டின்னு நம்ம கிட்டயே TR மாதிரி பேசுறாரு. காலைல இருந்து மத்தியானம் வரைக்கும் போடுற கடலைல ஆபீஸ் முழுசும் புகை மண்டலமா தெரியும். அப்புறம் வீட்டுக்கு போய்ட்டு சாப்டுட்டு நல்லா ஒரு குட்டி தூக்கத்த போட்டு நாலு மணிக்கு வருவாரு. வந்ததும் காபி பிரேக் போயிட்டு அஞ்சு மணிக்கு வந்தாருன மறுபடி எல்லா ப்ளோருக்கும் ஒரு ஜாலி ரௌண்டு. சரியா ஆறு மணிக்கு தலைவரு டாஸ்மாக்குக்கு கெளம்பிடுவாரு. இது தான் அவரோட ஒரு நாள் டூட்டி. இவரோட பிரதாபங்களயும் நம்ம அடுத்த பதிவுகள்ல பார்க்கலாம்.

2 comments: