Thursday, May 6, 2010

தோழி

மக்களே இது என்னோட சொந்த கற்பனை(ரூம் போட்டு யோசிச்சது), இது இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இல்லை மதுரையிலோ இருக்கும் யாரை பற்றியும் எழுதவில்லை என்பதை அண்ணன் அஞ்சா...... சார்பாக கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். படுச்சுட்டு என்சாய் பண்ணுங்க.

தோழி


என்னை விட்டுச்சென்ற தோழி என் மனதில் விதைத்துச் சென்றது அவள் நினைவுகளை. விதை வளர்ந்து விருட்சமாய் இருபது அவளுக்கு தெரியாதே. அதை மறைக்க முடிந்த என்னால் ஏன் அவளை மறக்க முடியவில்லை. எப்பொழுதெல்லாம் அவளது நியாபகம் வருகிறது? எப்போது வராமல் இருக்கிறது. மறந்தால் தானே அவளை நினைப்பதற்க்கு. எட்டுத்திக்கிலும் எங்கு நோக்கினாலும் எப்படிச்சென்றாலும் உன் நினைவுகளே. உனக்கு விருப்பமான பாடல்களை பார்த்தால், சிறுகுழந்தை கன்னத்தைக் காட்டி முத்தம் கேட்டால், பொரிகடலை மாவு உருண்டையை பார்த்தால், யாரவது பலூன் கேட்டால், பஞ்சுமிட்டாய் கலரை பார்த்தால், எங்காவது 35 என்ற எண் கண்ணில் பட்டால், strawberry ஐஸ்கிரீம் ருசித்தால், நீண்ட கூந்தல் கண்டால், நெற்றியில் குங்கும கீற்றோடு எதிரே ஒரு பெண் வந்தால், மாமா என்று யாரவது என்னை அழைத்தால், திருப்பதி லட்டு யாரவது கொடுத்தால், கன்னகுழியோடு என்னருகே ஒரு பெண்மை வந்தால்,செல்லம் என்ற வார்த்தை என காதில் கேட்டால் உடனே ஓங்கி வளர்கிறது உன் நினைவு என்னும் விருட்சம். இவை அனைத்தும் அனுதினமும் ஒருமுறையேனும் நடந்து விடுவது ஏனோ?. அன்று தூக்கத்தை மறந்து அலைபேசினேன் உன்னோடு, இன்றோ தூக்கத்தை தொலைத்து அசைபோடுகிறேன் உன் நினைவோடு. என்றேனும் உன்னை காண்பேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் - தோழன்.

யாராச்சும் கண்டு பிடுச்சா சொல்லுங்கப்பா:-)

No comments:

Post a Comment