Wednesday, May 5, 2010

சிம்புவின் சொல்ல மறந்த கதை

சிம்புன்னு சொன்னதும் நீங்க எதோ விண்ணை தாண்டி வருவாயா சொம்புன்னு நெனச்சுடாதீங்க. இவன் தொட்டி ஜெயா சிம்பு. ரொம்ப மோசமான பையன், ஒரு காதல் பறவையோட(love bird) கர்பத்தையே கலச்சவன், அந்த கதைய இன்னொருநா சொல்றேன். சித்தப்பா ஒரு முக்கா டௌசர் வெச்சுருந்தான், அது இந்த சூட்கேஸ் ஒற துணில செஞ்சது. அவன் சின்ன புள்ளையா(?) இருக்குறப்போ வாங்குனது. பத்தாம போன பாண்ட ஸ்டைலா முக்கா டௌசரா போட்டுக்கிட்டு அலைஞ்சது இந்த பக்கி. இதுல என்ன விசேஷம்னா அத வருஷத்துல ஒரே ஒரு தடவ தான் தொவைக்கும். கேட்டா வைகை ஆத்துல எப்போ தண்ணி வருமோ அப்போ தான் இவுரு தொவப்பாராம். பாசக்கார பய மக்களே இதெல்லாம் நடக்குற விசயமா?. இந்த அளவுக்கு பெருமை வாய்ந்த அந்த டௌசர எங்க ரூம் வாசல்ல தொங்க விட்ருவோம். ஏன்னா ஒரு கொசுகூட ரூம்குள்ள வராதுன்னா பாத்துகோங்க. எல்லாமே வாசல்லையே செத்துபோய்டும். அப்டி ஒரு சக்தி வாய்ந்தது. ஒரு நாளு டௌசர் வெளில தொங்குற தைரியத்துல எல்லாரும் ரூம்குள்ள உட்கார்ந்து படுச்சுக்கிட்டு(ஹிஹிஹி ) இருந்தோம். சிம்பு மட்டும் எதோ தீவிரமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தான். கொஞ்ச நேரங்கலுச்சு சித்தப்பாவ சொரண்டி, அங்க பார்ரா அதிசியத்தனு சொன்னான். ஒரு ரெண்டு இன்ச் கேப்ல ஒரு கருந்தேள் வந்துக்கிட்டு இருந்துச்சு. எல்லாரும் அடுச்சுப் பிடுச்சு எந்திரிச்சு ஓடுனோம். சித்தப்பா ஜஸ்ட் எஸ்கேப்பு. நம்ம பைல்வான் அந்த தேள நசுக்குனாறு. சித்தப்பா நன்றியோட சிம்புவ பார்த்து "ரொம்ப தேங்ஸ்டா மாப்பி, எதோ அதிசயம்னு சொன்னேல அது என்னடா"ன்னு கேட்டான். அதுக்கு சிம்பு சொன்னத கேட்டு சித்தப்பா கொலவெறியோட தொரத்துனான். என்ன சொன்னான்னா " அது வேற ஒன்னும் இல்லைடா மாப்பி, அந்த தேளு வாசலுக்கு வரும்போதே பாத்துட்டேன், உன் டௌசர தாண்டி உயிரோட வந்துச்சா அதான் மெய் மறந்து சொல்ல மறந்துட்டேன்".

3 comments:

  1. சித்தப்பா போர்வை பத்தியும் ... அவரோட சாகசங்கள் பத்தியும் கொஞ்சம் விரிவா எளிதின நல்ல இருக்கும் ...

    ReplyDelete
  2. @Karthick
    அடுத்த பதிவுல வெவரமா சொல்லிடலாம்
    @Pal
    Really

    ReplyDelete