Wednesday, May 12, 2010

ஐஸ்கிரீம்

இதுவும் நம்ம சித்தப்புவோட பராக்கிரமம் தான். ஒருநாளு நானு, வாய் அப்புறம் சித்தப்பா மூணு பேரும் இருந்தோம். வாய் அப்டினதும் இவன் ரொம்ப வாயாடின்னு நெனச்சுடாதீங்க, இவன் வேற மாதிரி, யார்கிட்ட எப்போ எப்டி பேசணும், எப்டி நடந்துக்கணும்னு இவனுக்கு நல்லா தெரியும், எங்க கூட்டதுலையே இவன் தான் படிப்ஸ். என்ன நாங்க ராத்திரி முழுசும் கஷ்டப்பட்டு போடுற ப்ரோக்ராம்ஸ் எல்லாத்தையும் பொண்ணுங்க கிட்ட சூர விட்ருவான். சரி விஷயத்துக்கு வருவோம். அன்னிக்கு ரொம்ப வெக்கையா இருக்குதேனு மூணு பேரும் ரோட்ல நடந்துகிட்டு இருந்தோம். அப்போ அந்த பக்கமா ஒரு ஐஸ் வண்டி வந்துச்சு. ஒடனே சித்தப்பா ஐஸ் கிரீம் வாங்கி குடுத்தாலே ஆச்சுனு அடம்பிடுச்சான். நாங்களும் சரி வயசான காலத்துல ஆசப்பட்டத சாப்டட்டுமேனு அரை லிட்டர் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தோம். வரும்போது ஒரு பாம்ப பார்த்தோம். ரூம்ல வெச்சு சாப்டும்போது சித்தப்பா அவனோட வாழ்க்கைல நடந்த பாம்பு கதைகள எட்டாவது தடவையா சொல்ல ஆரம்பிச்சான், ஆனா இங்கிட்டு நானும் வாயும் ஐஸ்கிரீம காலி பண்ணிட்டோம். கதைய முடுச்சுட்டு கீழ பார்த்த சித்தப்பு அப்டியே ஷாக் ஆய்ட்டான். எங்கடா ஐஸ் கிரீம்னு கேட்டான். அதுக்கு நானு மாப்புள நீ மொக்கை போடுறப்ப அந்த வெக்கை தாங்க முடியாம நாங்க காலி பண்ணிடோம்டானு சொன்னேன். ஒடனே சித்தப்பு "மொக்கைனா என்னடானு" கேட்டான் அதுக்கு நானு நீ போடுற எல்லாமே மொக்கை மட்டும் தாண்டான்னு சொல்ல என்னைய கொலைவெறியோட பார்த்தான். ஒடனே சரி விடுடா முடுஞ்சது முடுஞ்சு போச்சுன்னு நான் சொல்ல சித்தப்பு "அப்போ முடியாதது முக்கிட்டு போச்சா?", எனக்கு ஒடனே ஐஸ்கிரீம் வேணும்னு கேட்டான். அதுக்கு வாய் சொன்னான் " இல்லடா முடுஞ்சது வாய்குள்ள போய்டுச்சு, முடியாதது காலைல போகும்"னு. ஆணியே புடுங்க வேண்டாம்னு சித்தப்பு போத்திக்கிட்டு படுத்துருச்சு. வெளக்கெண்ணைய பூசிகிட்டு உருண்டாலும் ஒட்டுறது தான ஒட்டும், நாஞ்சொல்றது சரிதான?

No comments:

Post a Comment