Thursday, November 29, 2012

தடம்


தெளிந்த நீரோடையாக இருந்த மனதில்
ஆழமாய் தடம் பதித்து
அதிர்வலைகளைக் கொடுத்தாய்
அலைகள் நின்ற பின்பும் தடம் மட்டும்
மீதம் உள்ளது நிரந்தரமாய்
அழிக்கவும் முடியவில்லை
அதற்கு மனம் வரவுமில்லை
தடத்தை எண்ணி கழிக்கிறேன் நிஜத்தை

மாறும் உலகங்கள்

நீதான் என் உயிர் நன்பன் என்னுலகில் முதல்வன் நீமட்டுமே என்ற தோழியின் உலகில் நான் என்னவாக இருப்பேன், துரோகத்தை மட்டுமே விட்டுச்சென்ற அவள் இன்று என்னுலகில் இல்லை நீ என்னை காதலிக்க வேண்டாம் எனது காதலையும் ஏற்கவேண்டாம் உன் நட்பு மட்டும் போதும் அதுமட்டுமே என் உலகம் என்று கூறியவள் கொடுத்தது அவப்பெயரை மட்டுமே நீ கேட்டால் என்னுயிரையும் தருவேன் உலகில் எங்கிருந்தாலும் உனக்காக வருவேன் எ ன்ற நண்பன் எங்கிருக்கிறான் என்ற தகவல் கூட இல்லை. தொடர்புகொண்டாலும் என்னுடன் படித்தவன் தானே நன்றாக இருக்கிறாயா என்ற விசாரிப்பு மட்டுமே கிடைத்தது நாட்பை சொல்லி சொல்லியே என் காசில் குடித்து விட்டு வேறொரு உலகம் தேடிச்சென்றான் இன்னொருவன் ஒருகாலத்தில் சிலரின் உலகமாக இருந்த நாம் இப்பொழுது அவர்கள் உலகில் யாரோ ஒருவராக அல்லது இல்லாமல் கூட இருக்கிறோம் இருந்தும் தொடர்புகள் குறைத்தால் கூட இன்றும் என்னைப்பற்றி நினைக்கும், உடன் படித்தவர்கள் என்னிடம் பேசுவதற்கு கூட யோசித்த நிலையில் என்னை ஆதரித்து அரவணைத்த என் கல்லூரிஅறை நண்பர்களின் உலகங்களில் கல்லூரியில் மட்டுமல்ல சென்னையில் என்னுடனே இருந்த இப்பொழுதுகூட மதுரை வந்தால் என்னைப் பார்க்க ஓடி வரும் நண்பனின் உலகிலும் என் காதலை சொந்தங்கள் ஆனைவரும் எதிர்த்த நிலையில் என் மகனின் விருப்பமே எனக்கு முக்கியம் என்ற ஒரு வரியில் புறக்கணித்து "அப்பா ஐடி துறை சரி இல்லை" என்ற பொழுது தன் விருப்ப ஓய்வை எனக்காகஇரு வருடங்கள் தள்ளி வாய்த்த என் தந்தையின் உலகிலும் நன் செய்த அனைத்து தவறுகளையும் மறந்தும் மன்னித்தும் இன்றும் என்னை சிறுகுழந்தையாகவே பாவிக்கும் என் தாயின் உலகிலும் என்னை மட்டுமே நம்பி என்கை பிடித்து என் வாழ்கையின் துணையாய் நம்பிகையை வழிகாட்டியை தோழியாய் எனக்காகவே வாழும் என்மனைவின் உலகிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன் கம்பீரமாகவும் பெருமையாகவும்

Sunday, October 23, 2011

என் இனிய மகளே

யாருமில்லாப் பின்னிரவில்
என் தனிமையை தின்று கொண்டிருந்த அறையில்
இன்று உன் ஸ்பரிசமே எங்கும் விரவியுள்ளது

விரக்தியைத் தேடும் என் தனிமையை
உன் அணைப்பு விரட்டுகிறது

வறண்ட பாலையாய் இருண்டு கிடக்கும் வாழ்க்கையை
உன் இதழ் முத்தத்தினால் துளிர்க்கச்செய்தாய்

திக்குத்தெரியாமல் கிடந்த என் வாழ்க்கைக்குள்
வந்தாய் வழிகாட்டியாய்

எப்பெரும் துன்பமும் இடரும்
உன் சிறு புன்னகையில் சிக்கிச் சிதறிப்போனது

உன் பிஞ்சு விரலை பிடித்து நடைபயிலையிலே
என் தந்தையை இன்னும் அதிகம் நேசிக்கச் செய்கிறாய்

இனி வாழும் நாட்கள் யாவும் உனக்காகவே இன்றி
எனக்காக அல்ல என் இனிய(யா) மகளே

Saturday, August 20, 2011

காத்தாடி

காற்றின் விசையில் கயிறு அறுந்து
விண்ணோக்கி பறக்கும் காத்தாடி போல
திக்குத்தெரியாமல் அலைபாயும் மனசு

சலனமின்றி வெக்கை புழுங்கும்
வேனிற்காலத்து கிணறு போன்று
வெறுமை ஆகியது வாழ்க்கை

சிதறிக்கிடக்கும் மௌனங்களை அள்ளியெடுத்து
கோர்க்கிறேன் மாலையாக
முடிச்சவிழ்க்கும் வித்தை தெரிந்த
உன்னிடம் விளையாடக் கொடுக்கிறேன்
ஒவ்வொரு மெளனமாக

தொலைந்துபோனவை

தொலைதூர ரயில் சத்தம்

தொடர்ந்து கேட்கும் குயிலின் குரல்

பார்த்து ரசிக்க பறவைகள்

பரவசமடைய வைக்கும் சிட்டு குருவிகள்

அலைபேசி இல்லா அருமையான காலமது

கோடையில் வறண்ட கண்மாயில்

சுகமான மட்டைபந்து விளையாட்டு

பருவம் மாறும்பொழுது மாறும் விளையாட்டுக்கள்

கிட்டி, பம்பரம், சில்லாக்கு சீட்டு அப்புறமா கோலிகுண்டு

மழை பெய்தால் ஊரணியில் குளியல்

குளியல் முடித்து தூண்டிலில் பிடித்த மீன்கள்

ஆயுத பூஜையானால் காலனியில் கூடுப்படயல்

வெயிலில் சுற்றி சூடுபிடித்து சுண்ணாம்பு தேடிய நாட்கள்

கார்கால குளிரை மறைக்க அப்பாவின் சட்டை

கண்மூடி தூங்க வைக்கும் அம்மாவின் தலைகோதும் விரல்

உடலினை உறுதி செய்த மிதிவண்டி

இராவுணவை முழுங்கச்செய்த ஆச்சியின் விக்ரமாதித்தன் கதைகள்

மாலை முழுதும் ஓடிப்பிடித்து விளையாடி

மின்சாரம் இல்லா நேரங்களில் ஒளிந்து பிடித்து விளையாடி

கணினி இல்லா உலகில் நாங்களே சுதந்திரப் பறவைகள்

வாசிப்பை தொடங்கி வைத்த அம்புலி மாமா

சகிப்பை கற்றுத்தந்த பள்ளி வாழ்க்கை

தோல்வியை கற்றுத்தந்த விளையாட்டுகள்

வெற்றியடைய சொல்லித்தந்த தோல்விகள்

கனமானது நெஞ்சம் இந்த பால்ய காலத்துச் சுவடுகள் இல்லாமல்

வளரப்போகும் நம் சந்ததிகளை நினைத்து

Tuesday, August 10, 2010

ஆபீஸ் அரவிந்தசாமி

நம்ம ஆபீஸ்ல ஒரு அரவிந்தசாமி இருக்காருங்க. அவரு பேரு அரவிந்தசாமி இல்ல பாக்குரதுக்கு ஆளு அரவிந்தசாமி மாதிரி இருப்பாரு. அவர் உண்டு அவரோட வேலை உண்டுன்னு ரொம்ப அமைதியா அடக்கமா இருப்பாரு. எல்லாருக்கும் எல்லா உதவியும் மனசுகோணாம செய்வாரு. ஏன்னா அவரு உத்தியோகம் அப்புடி. வெள்ளிகிழமைல கூட புல் பார்மல்ஸ்ல வருவாரு. ஒரு சாமியாரு மாதிரி வந்துட்டு இருப்பாரு. திடீர்னு என்ன ஆச்சுனே தெரியல இப்போ ஆளே ரொம்ப மாறிட்டாரு. பயங்கரமா ஸ்டைல் பண்றாரு. எப்பவுமே ஒரே சிரிப்பா இருக்குது. ரொம்ப பிஸியா இருக்குற மாதிரி ஓவரா சீன போடுறாரு. போன வாரம் வெள்ளிகிழமை அவரு போட்ருந்த காஸ்ட்யூம பார்த்து ஆபீஸ் முழுசா ஒரு அதிரிச்சி அலையே பரவிருச்சு. ஜீன்ஸ், டி ஷர்ட் அப்புறம் லேட்டஸ்ட் ஸ்போர்ட்ஸ் சூ, கழுத்துல கைல விதவிதமான பேண்ட்ஸ் எல்லாம் போட்டு ஒரு குமால்டிக்கா வந்தாரு. என்னனு விசாருச்சப்பதான் தெருஞ்சது சும்மா இருந்த சிங்கத்த சொரிஞ்சு விட்டுட்டாய்ங்கனு. எதோ நடந்துருக்கு. அதுக்கபுறம் தான் தலைவர்கிட்ட இவ்வளவு மாற்றங்கள். டெய்லி கனவு கண்டுகிட்டே வர்றாரு போறாரு. யார்கிட்ட லாக் ஆயிருக்காருனு தெரியல?. தெருஞ்சா சொல்றேன்.

Tuesday, June 29, 2010

ராவணன்


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ். அதே மாதிரிதான் ராவணன் படத்த பாக்குரவங்களுக்கும். சாமானியனுக்கு எடுக்குற படத்த பண்டிதர்கள் அப்டின்னு தங்களைத் தாங்களே சொல்லிக்கிற சில சின்ன பசங்க ராவணன் படம் நல்லா இல்ல, வசனமே புரியல, திரைக்கதை சரி இல்ல அப்புறம் ஏ.ஆர். ரஹ்மான் இசை சரி இல்ல அப்டின்னு சொல்லிக்கிட்டு திரிறாய்ங்க. அதாவது எல்லாரையும் சகட்டு மேனிக்கு திட்டனும் விமர்சனம் பண்ணனும் அப்புறம் குற்றம் சொல்லணும் அதுல பிரபலமாகனும், இத மட்டுமே தன்னோட வாழ்கையின் குறிக்கோளாய், லட்சியமாய் கொண்ட சாருநிவேதிதா ராவணன் படத்த ரொம்ப கொதறி இருக்காரு. இதெல்லாம் ஒரு பொழப்பா அப்டின்னு கேக்குரவங்ககிட்ட அது தான் அவரோட பொழப்பு அப்டின்னு தாழ்மையுடன் சொல்லிக்குறேன். வீரையா அப்டினா அது வீரப்பனாம், அவர இந்த படத்துல மணி நல்லவரா காமிச்சுட்டாரம். சாருவோட மகத்தான கண்டுபிடிப்பு இது. முடியல!!!!. இவர பெர்முடா முக்கோணம் அனுப்பனும். இவர பத்தி வினவுல ஒன்னு சொல்லிருந்தாங்க, அத படுச்சு சிரிச்சு சிரிச்சு வயறு வலி வந்துடுச்சு. ஒருத்தன் ஒரு பீர் வாங்கி குடுத்தா ஒடனே அவன தன்னோட சீடனா ஏத்துகிட்டு அவனோட புகழ் பாடுவாராம். ஜெயமோகன் ஆபீஸ்ல தூங்குறத பத்தி ப்ளாக்ல எழுதுறாருன்னு குத்தம் சொல்ற இவரு நாய் மேய்க்கிறத என்னவோ நாட்டைக் காப்பாத்துற மாதிரி சொல்றாரு அவரோட ப்ளாக்ல.

மக்களுக்கு இசை பிடுச்சுருக்கு, விக்ரம் & ஐஸ்வர்யா நடிப்பு பிடுச்சுருக்கு. படத்த எடுத்த விதம் பிடுச்சுருக்கு. ஒரு ரெண்டு மணிநேரம் தங்களை மறந்து சில விஷயங்கள ரசிக்கத்தான் மக்கள் படத்துக்கு போறாங்க. அவங்கள இந்த படம் கட்டாயம் ஏமாத்தாது. வீரையாவாவே விக்ரம் வாழ்துருக்காரு. அவருக்கும் ஐஸ்வர்யாக்கும் இடைல வரும் அந்த மெல்லிய உறவை எவ்ளோ கண்ணியமா காமிக்கணுமோ அவ்ளோ கண்ணியமா மணி காமிச்சிருக்காரு. படத்தோட ஹீரோக்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவாளர். ஏ.ஆர். ரஹ்மான் பேர போட்டதும் தியேட்டர்ல அப்டி ஒரு விசில் சத்தம். எப்பவும் மணி படத்துல எல்லாரையும் தாண்டி மணி ஹீரோவா தெரிவார். ஆனா இந்த படத்துல அவரையும் தாண்டி இவங்க தெரிறாங்க. ஆர்ட் டைரக்டர் அவரோட பணிய ரொம்ப சிறப்பா செஞ்சுருக்காரு. தன் தங்கச்சிய சிதச்சவங்கள கொன்னுட்டு அதுக்கு காரணமானவன அசிங்கப் படுத்துறாரு. தன் தங்கச்சிய நல்லா பாத்துக்குவான்னு நம்பி கல்யாணம் செஞ்சு குடுத்த மாப்பிளை அவளை கை விட்டுட்டு பயந்து ஓடினதும் அவனோட கைய வெட்டுறாரு வீரையா. இதெல்லாம் நடக்காத காரியம், இப்டியா பண்ணுவாங்கனு சொல்ற சின்ன பய மக்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். உங்கள யாரும் படம் பாக்க பாக்கு வெத்தல வெச்சு அழைக்கல. படத்துல எல்லாமே கரெக்டா இருக்கானு கேட்டா இல்லன்னு தான் சொல்லணும். நூறு சதம் இல்லனாலும் எண்பது சதம் சிறப்பாவே இருக்கு. இது விமர்சனம் இல்ல மக்களே என்னோட கருத்து. படம் பாக்குறதும் பாக்காததும் உங்க இஷ்டம். படம் பாக்குறதா இருந்தா தியேட்டர்ல பாருங்க குட் விசுவல் ட்ரீட்.