Tuesday, May 4, 2010

கிண்டர் கார்டன்

கிண்டர் கார்டன் அப்டினதும் நான் எதோ பால்வாடி பத்தி பேச போறேன்னு முடுவு பண்ணிடாதீங்க மக்களே. சில கொழந்தைங்க MCA படிக்கிறப்போ ரூம் போட்டு படுச்சா தான் நல்லா படிக்க முடியும்னு ரூம் போடாமலே முடிவு பண்ணி ரூம் போட்டாங்க (படிக்கிறதுக்குங்க). இதுல என்ன தொழில் ரகசியம்னா எல்லா பக்கிகளும் உள்ளூருதான். ஒரே ஒரு பக்கி மட்டும் பழனி. நாங்கெல்லாம் மருதைங்க(மதுரை) . அந்த மாதிரி கொழந்தைங்க(?) தங்கி இருந்த ரூம "கிண்டர் கார்டன்" அப்டினு கூப்டனும்னு எல்லாருக்கும் டீ வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிடாய்ங்க. மொத்தம் ஆறு கொழந்தைங்க தங்கி இருந்துச்சுங்க. அதுல இந்த கொழந்தையும் ஒன்னு(ஹி ஹி ஹி அமுல் பேபி). கொழந்தைகள பத்தி பாக்கலாம்

அமுல் பேபி - எங்க பாமிலியே அமுல் பேபி பாமிலி தான், ஏன்னா நாங்க எல்லாருமே எப்பவுமே குண்டா தான் இருப்போம். நான் இதுல ரொம்ப முக்கியமான ஆளு இல்லீங்க.

சித்தப்பா - இது தாங்க இந்த தொடருல ஹீரோ. ஆளு இவன் குள்ளம் தான் ஆனாலும் பண்றதெல்லாம் கோக்குமாக்குதான். வாய் மட்டும் செக்கானூரணி வரைக்கும் போகும். ரூம்ல யாருக்கு கோவம் வந்தாலும் குமால்டிகா இருந்தாலும் இவன போட்டு நாலு சாத்து சாத்துவோம். மனசுக்கு அவ்ளோ திருப்தி வரும்னா அது எவ்ளோ சேட்டை பண்ணும்னு தெருஞ்சுக்கோங்க. அப்புறம் இது ஏன் சித்தப்பானா? இது எங்க தாத்தா செட்டு, பெயில் ஆகி எங்க கூட படுச்சுக்கிட்டு இருந்துச்சு. பாக்குறதுக்கு வையாபுரி குள்ளமா இருந்தா எப்டி இருப்பாரோ அப்டி இருப்பான்.

வெள்ளையன் - பழனில ஊர்மக்கள் எல்லாரும் ஊர் நல்லா இருக்கணும்னு இவன ஊற விட்டே தொரத்திட்டாய்ங்க. எங்க கெரகம் இது எங்க கூட வந்து செட்டில் ஆய்டுச்சு. வெள்ளையா இருக்குற ஒரே காரணத்துக்காக மாசத்துல ஒரு நாள் மாட்டும் தான் குளிப்பான். விடிய விடிய examku படுச்சுட்டு விடிஞ்சதும் தூங்கி examku போகாம அரியர் வெச்ச பக்கி. உலக மகா சோம்பேறி.

அனுமாரு - நெசமாலும் இவரு அனுமாரு தான். நாங்களாச்சும் எங்க காலேஜ்ல பொண்ணுங்க கூட கடலை போட்ருக்கோம்(அத மட்டும் தானடா பண்ணீங்கனு சொல்றது கேக்குது...... அதையெல்லாம் சொன்னா நல்லா இருக்காதுல.... வரலாறு முக்கியம் அமைச்சரே). ஆனா இவன் யார்கூடயும் பேசமாட்டான்(பொண்ணுங்க கூட தான்). எனக்கும் இவனுக்கும் ஒரே வேலை அந்த சித்தப்பாவோட மாரடிக்கிரதுதான். சில சமயம் மாத்து குடுக்குறதும்தான்.

சிம்பு - நெஜமாலுமே இவன் சிம்புவோட ரசிகன். பாக்குறதுக்கும் அப்டிதான் இருப்பான். பாதிநாள் வீட்டுக்கு ஓடிருவான். இவன் தான் எங்க ரூம் பாய். அதாங்க ரூம கூட்டி, ஒதுங்க வெச்சு சுத்தமா வச்சுகிறது. ஊமைக்குசும்பன்.

வாய் - வாய் மட்டும் தான். எங்க உனிவேர்சிட்டிலையே ரொம்ப நல்ல பையன் ஆருன்னு கேட்டா எல்லா பொண்ணுங்களும் இவன தான் சொல்லுவாளுங்க, உண்மைலையே... மத்த நாங்க எல்லாருமே bad பாய்ஸ். பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சனைனா முதல் ஆளா அங்க இவன் தான் இருப்பான்.

பைல்வான்- ஆளு சும்மா அம்ஜத்கான் மாதிரி இருப்பான். பேச்சே கிடையாது ஒன்லி வீச்சு தான்( அவன் கையால தாங்க). இவன்கிட்ட டெய்லி யாராச்சும் அடி வாங்காம இருந்ததே இல்ல. நாங்க எல்லாம் இவன ஓட்டுவோம் இவனால பதிலுக்கு எதுவும் சொல்ல முடியாது. ஒரே போடா போட்ருவான். இவனும் வாயும் ஒன்னாவே திரிவானுங்க.


இது தாங்க நம்ம கிண்டர் கார்டன். இவனுங்க அடுச்ச லூட்டி, லந்துகள நாம வரும் பதிவுகள்ல பாக்கலாம்.சனியன் சடை பின்ன ஆரம்பிச்சுடுச்சு, இனி போட்டு வெச்சு பூ வைக்காம போவாது. அவ்வ்வ்வ்.......

4 comments:

 1. ayooo ayyooo...
  describe more abt அமுல் பேபி daaaa seba...

  பைல்வான்naaa -- nanma pal pandiaaa

  ReplyDelete
 2. பைல்வான்naaa -- nanma pal இல்ல ..

  ReplyDelete
 3. தலைவா , பெயர சொன்ன சும்மா அதிரன்னும் இல்ல ... இன்னும் நிறைய வென்னும் .... அமுல் பப்பி கொஞ்சமா சொல்ல கூடாது ..

  ReplyDelete
 4. @Ganesh Ram

  அமுல் பேபி பாவம்

  @Karthick

  இனிமேல் நல்லா அதிரும்.
  கம்பனி சீக்ரெட்ட வெளில சொல்லாத.
  நம்ம ரூம் செவுத்த எல்லாம் குத்தி உடச்சது யாரோ அவர் தான் பைல்வான்.

  ReplyDelete